Sunday, September 21, 2014 9:33 AM IST

About Us


Express Network Private Limited (ENPL) is a sister concern of Express Publications (Madurai) Limited (EPML) which publishes well known newspapers like The New Indian Express, The New Sunday Express, Dinamani, Kannada Prabha and magazines like Malayalam Varika, Tamilan Express, Cinema Express etc. ENPL has been granted licence by EPML to host the content generated by its various publications on the following websites:

INDIAVARTA
EXPRESSBUZZ
DINAMANI
ANDHRA PRABHA
KANNADA PRABHA
MALAYALAM VARIKHA
AP WEEKLY
CINEMA EXPRESS
TAMILAN EXPRESS

ENPL respects the privacy of its users and is committed to protect it in all respects.

With a view to offer an enriching and holistic Internet experience to its users, ENPL offers a vast repository of Online Sites and variety of community services. You may read 'About Us' to know more about ENPL. Most of the Online Community Services are offered for free but you need registration to surf the content stored in archives and the paid sections.

Among the information that you are required to provide is: a) your name, b) email address, c) sex, d) age, e) PIN code etc., your occupation, interests, and the like. (All required information is Service Dependent). The Information as supplied by the users enables us to improve our sites and provide you a more user-friendly experience.

Our web servers automatically collect limited information about your computer's connection to the Internet, including your IP address, when you visit our sites. (The IP address is a number that lets computers attached to the Internet know where to send data -- such as the web pages you view.) The IP address, however, does not identify you personally. We use this information to deliver our web pages to you upon request, to tailor our site to the interests of our users, to measure traffic within our site and let advertisers know the geographic locations from where our visitors come.

ENPL includes links to other websites. Such sites are governed by their respective privacy policies, which are beyond our control. Once you leave our servers (you can tell where you are by checking the URL in the location bar on your browser), use of any information you provide is governed by the privacy policy of the operator of the site you are visiting. That policy may differ from ours. You are requested to go through the Privacy Policy of those websites before using the same. If you can't find the privacy policy of any of these sites via a link from the site's homepage, you should contact the site directly for more information.

When we present information to our advertisers -- to help them understand our audience and confirm the value of advertising on our website -- it is usually in the form of aggregated statistics on traffic to various pages within our site.

All information gathered on our websites is securely stored within the database controlled by us. The database is stored on servers secured behind a firewall; and access to the servers is password-protected and is strictly limited. However, as effective as our security measures are, no security system is impenetrable. We cannot guarantee the security of our database, nor can we guarantee that information you supply will not be intercepted while being transmitted to us over the Internet. And, of course, any information you include in a posting to the discussion areas is available to anyone with Internet access.

However, the Internet is an ever-evolving medium. We reserve our right to modify, update and alter the Privacy Policy at any time. Of course, our use of any information we gather will always be consistent with the policy under which the information was collected, regardless of what the new policy may be. The material changes if any will be notified time and again and you are requested to visit the Privacy Policy Section to know about the changes.

We use third-party advertising companies to serve ads when you visit our Web site. These companies may use information (not including your name, address, email address or telephone number) about your visits to this and other websites in order to provide advertisements about goods and services of interest to you.

We will not reveal your personal identity in connection with the disclosure of such interest to any third party.However, we reserve our right to disclose the information about the users including personal information when legally called upon to do so at the request of the Government and authorities conducting an investigation or to protect against misuse of unauthorized use of our websites.

If you have any comments or questions with regard to our Privacy Policy, you may contact us at the following e-mail addresses:

webmani@dinamani.com  or  sriram.s@dinamani.com

இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப்பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி", தமிழ்கூறு நல்லுலகத்துக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது.

"தினமணி" பிறந்த கதை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார் சதானந்த். நல்ல பெயருக்கு பத்து ரூபாய் பரிசு என்று அறிவித்தார். "தினமணி" என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இரு வருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
 
"தினமணி" என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம். அன்று முதல் இன்று வரை தனது பெயருக்குத் தக்கபடி "தினமணி" செயல்பட்டு வருகிறது என்பதே, அதற்குப் பெயர் சூட்டிய வாசகர்கள் இருவருக்கும், அந்தப் பெயரைத் தேர்வு செய்த சதானந்தத்துக்கும் நாம் செய்யும் கைமாறு!
 
சென்னை ஜார்ஜ் டவுனிலுள்ள மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெருவில் அலுவலகத்துடன் தொடங்கப்பட்ட தேசிய தினசரியான "தினமணி", பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். "தினமணி" நாளிதழின் விளம்பரத்தில் "பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடூழி வாழ்க!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும், சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
 
செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி" என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.
 
""இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் "தமிழர்" என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை "இந்தியன்" என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்"" என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.
 
இதுதான் 1934-ல் "தினமணி" நாளிதழ் பிறந்த கதை. சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில், விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக விளங்கிய "தினமணி", டி.எஸ். சொக்கலிங்கத்தின் தலையங்கம் மூலம் ஒரு மாபெரும் தேசத் தொண்டாற்றியது. சுதந்திர இந்தியாவில் "தினமணி"யின் பங்கு அதைவிட அதிகரித்தது.
 
கடந்த 61 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளில், எத்தனை எத்தனையோ சோதனைகளில் தனது கொள்கைப் பிடிப்பில் தளராமல், லட்சியங்களை விட்டுக் கொடுக்காமல் "தினமணி" தொடர்கிறது என்றால் அதற்கு, அதன் முன்னோடிகளான சதானந்த், ராம்நாத் கோயங்கா, டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்றோர் போட்டுத் தந்த அடித்தளம் மட்டுமல்ல, தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாக, தேசிய சிந்தனையின் அடித்தளமாக அன்றும், இன்றும், என்றும் தமிழ்கூறு நல்லுலகம் "தினமணி" நாளிதழைக் கருதுவதுதான் காரணம்.
 
"தினமணி" தொடங்கியபோது அன்னிய ஏகாதிபத்திய அரசை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை என்றால், இன்று நமது ஆட்சியாளர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயம்.
 
கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தாலும் காட்சிகள் மாறுவதில்லை என்கிற நிலைமைக்கு மாற்றத்தை யார் ஏற்படுத்துவது? சுதந்திர இந்தியாவின் சுதந்திரத்தையும், பாரத நாட்டின் பண்பாட்டையும், தமிழர்தம் தனித்துவத்தையும் யார் காப்பாற்றுவது? இதுவும் ஒருவகையில் ஒரு சுதந்திர வேள்விதான்.
 
அந்தப் பணியில் "தினமணி" தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. ஆம், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், ஆட்சியின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, தவறுகள் திருத்தப்படவும், குறைகள் களையப்படவும் "தினமணி" பங்காற்றும். நடுநிலை தவறாமல், நல்லதைப் பாராட்டித் தவறைத் தட்டிக் கேட்கும். சமுதாயத்தில் காணும் தடம் பிறழ்ந்த செய்கைகளைப் படம்பிடித்துக் காட்டி சமுதாய மாற்றத்திற்கு வழி கோலும்.
 
முதல் நாள், முதல் பிரதியை வெளிக்கொணர்ந்தபோதிருந்த அதே லட்சிய வெறியுடனும், வாசகர்கள் மீதுள்ள நம்பிக்கையுடனும், "தினமணி"யின் சமுதாயப் பணி தொடரும்... நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் உங்கள் "தினமணி"யின் பயணம் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் தொடர்கிறது...